பெற்றோர்களே…! குழந்தைகளை பள்ளியில் சேர்க்க அவசரப்படாதீங்க….!!! அது உங்களுக்கு தான் ஆபத்து…!!!!

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தக்க வயதுக்கு முன்பே பள்ளியில் சேர்ப்பதால், நம் சின்னஞ்சிறு குழந்தைகளின் குழந்தை பருவம் எங்கோ காணாமல் போகிறது. இன்று அவர்கள் பந்து விளையாடுவது மண்ணில் வீடு கட்டுவது போன்றவற்றை விட்டு விட்டு, கிளிகள் போல் பெரிய பெரிய ரைம்ஸ், பாடங்கள், கதைகள் போன்றவற்றை மனப்பாடம் செய்ய வேண்டியுள்ளது.

குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கட்டும் :

தங்கள் குழந்தைகள் ஆங்கில ரைம்ஸ் சொன்னால் பெற்றோருக்கு எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்படுகிறது. இன்று அந்த பிள்ளைகளின் குழந்தைத்தனம் முடிந்து வருகிறது. அவர்கள் வயதிற்கு மிஞ்சிய புத்திசாலியாகிறார்கள்.

Image result for குழந்தைகளை தக்க வயதுக்கு முன்பே பள்ளியில் சேர்ப்பதால்

இதற்க்கு காரணம் தக்க வயதுக்கு முன்பே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதுதான். தன குழந்தையை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, தாய்மார்கள் 2-3 மணி நேரம் ஒய்வு எடுத்துகே கொள்ள விரும்புகிறார்கள். எல்லாக் குழந்தைகளும் ஓடும்போது, ஏன் நம் குழந்தைகள் மற்றும் பின்தங்க வேண்டும் என எண்ணுகிறார்கள்.

வீட்டிலேயே கற்றுக்கொடுக்கலாம் :

Related image

சில பள்ளிகளை தவிர, பெரும்பாலான பள்ளிகள் பணம் சம்பாதிக்கும் வியாபார கூடங்களாக உள்ளன. அந்த பள்ளிகளில் உட்காருவதற்கு கூட சரியாக இடம் இல்லாமல், அளவுக்கு அதிகமாக குழந்தைகளை சேர்த்துக் கொள்கிறார்கள். இந்த வயதில் குழந்தைகளுக்கு தேவையான படிப்பை நீங்களே விளையாட்டாக வீட்டிலேயே சொல்லி தரலாம். நிச்சயமாக குழந்தைகள் அதை நன்றாக புரிந்து கொள்வார்கள்.

என்னதான் இருந்தாலும், வீடு மாதிரி வருமா? :

Image result for குழந்தைகளை தக்க வயதுக்கு முன்பே பள்ளியில் சேர்ப்பதால்

குழந்தைகளின் மனம் அழகானது. அவர்களை சரியான வயதுக்கு முன்பே கட்டுப்பாடுகளில் கட்டிப் போடாதீர்கள். அவர்கள் படிக்கும் பள்ளி 5-ஸ்டார் ஹோட்டல் போன்ற வசதி கொண்டதாக இருப்பினும், வீட்டின் சுதந்திரத்துக்கு ஈடுஇணை இல்லை. அவசரமாகக் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து நாம் அவர்களின் முன்னேற்றத்திற்கு தடை போடுகிறோம். இதனால் குழந்தைகளுக்கு படிப்பின் மீது வெறுப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment