தேவையின்றி இலங்கைக்கு செல்ல வேண்டாம் – சிங்கப்பூர் அரசு

மக்கள் தேவையின்றி இலங்கைக்கு  பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று சிங்கப்பூர் நாட்டினருக்கு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு அரசே காரணம் என கூறி, அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை அரசு பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்து, போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. போராட்ட களம் வன்முறையாக வெடித்ததில் பொது சொத்துக்கள் சேதம், அரசியல் தலைவர்கள் வீடுகளில் மீது தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறியிருந்தது.

இதனிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகுவதாக அறிவித்திருந்தார். இதற்கான கடிதத்தை அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம் அளித்திருந்தார். பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையில், அடுத்த பிரதமர் யார் என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தது.

இதனையடுத்து, இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க தற்போது பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், மக்கள் தேவையின்றி இலங்கைக்கு  பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று சிங்கப்பூர் நாட்டினருக்கு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.