போலி ஏஜென்டுகள் மூலமாக வெளி நாட்டுக்கு வேலைக்கு செல்லாதீர்கள் – அமைச்சர் செஞ்சி மஸ்தான்

போலி ஏஜென்டுகள் மூலமாக வெளி நாட்டுக்கு வேலைக்கு செல்லாதீர்கள் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். 

தாய்லாந்துக்கு வேலைக்காக சென்று மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய தமிழர்களில் 13 பேரை மீட்பது தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மீட்கப்பட்ட தமிழர்கள் நேற்று இரவு தாயகம் திரும்பினார். இவர்களை, அமைச்சர் செஞ்சி மஸ்தான் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

 செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், போலி ஏஜென்டுகள் மூலமாக வெளி நாட்டுக்கு வேலைக்கு செல்லாதீர்கள். மீதம் இருக்கும் தமிழக மக்களை தமிழக அரசு மீட்டுக் கொண்டு வரும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment