திமுக தலைவர் தேர்தல் – முதலமைச்சர் இன்று வேட்புமனு தாக்கல்!

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திமுக தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். திமுக தலைவர் பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்யலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.

இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திமுக தலைமை அலுவலகத்தில் திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யலாம். சென்னை அமந்தகரையில் நாளை மறுநாள் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தின்போது, திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment