மக்களவை தேர்தல்..! தேமுதிக தலைமை வெளியிட்ட அறிவிப்பு

DMDK: மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மறுநாள் முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் சென்னை கோயம்பேடு அலுவலகத்தில் நாளை மறுநாள் (மார்ச் 19ஆம் தேதி) விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார்.

Read More – முதல் நாளே கட்டுக்கட்டாக சிக்கிய ஹவாலா பணம்…தேர்தல் விதிகள் அமலுக்கு பின் போலீஸார் அதிரடி.!

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில், தேமுதிக அங்கம் வகிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இது தொடர்பான முடிவை இன்னும் தேமுதிக தலைமை அறிவிக்கவில்லை. அதிமுக – தேமுதிக கூட்டணி குறித்து 3வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று ரகசியமாக நடைபெற்றது. இதையடுத்து இத்தனை நாட்களாக நடைபெற்ற இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Read More – நிவாரணத் தொகை என்பது பிச்சை…ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி ஆளக் கூடாது – நிர்மலா சீதாராமன்.!

இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் சென்னை கோயம்பேடு அலுவலகத்தில் நாளை மறுநாள் (மார்ச் 19) மற்றும் 20ஆம் தேதி விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம் என்றும் 21ஆம் தேதி வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். மேலும் பொது தொகுதிக்கான விருப்ப மனு கட்டணம் ரூ.15,000 மற்றும் தனி தொகுதிக்கு ரூ.10,000 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment