நடிகர் அஜித்துடன் மோதிய இயக்குனர்! புதிய பட வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வாரா இயக்குனர் வினோத்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான  நடிகர். இவர்  பல படங்களில்  நடித்துள்ளார். இவரது படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதுண்டு.

இந்நிலையில், நடிகர் அஜித் விசுவாசம் படத்தினை தொடர்ந்து, இயக்குனர் வினோத் இயக்கத்தில், நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, அஜித்துக்கும் வினோத்துக்கும் சின்ன மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும் இதனால் தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை வினோத்திடம் இருந்து அஜித் பறித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

ஆனால், அப்படிப்பட்ட எந்த மனஸ்தாபமும் ஏற்படவில்லை எனவும், இது வதந்தியான தகவல் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது இயக்குனர் வினோத் என்பது உறுதியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment