• தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
  • எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய சென்னை மக்களவை தொகுதியில் தெஹ்லான் பாகவி போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது

2019 மக்களவை தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40-மக்களவை தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டது.

அதேபோல் 2019 மக்களவை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணியில் எஸ்டிபிஐ  (Social Democratic Party of India) கட்சிக்கு, மத்திய சென்னை மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Image result for தெஹ்லான் பாகவி

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய சென்னை மக்களவை தொகுதியில் தெஹ்லான் பாகவி போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.