தண்ணீரை முறையாக குடிப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா…?

உலகில் வாழக்கூடிய மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என அனைவருக்குமே மிக முக்கியமான ஆதாரமாக நீர் உள்ளது. நீர் இல்லாமல் ஒரு நாளும் மனிதர்களால் சுறுசுறுப்பாக இருக்க முடியாது. நீரில் கலோரிகள் எதுவும் அதிகம் இல்லாவிட்டாலும், இது நமது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.

இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதற்கும் உதவுகிறது. இருப்பினும்  நீரை சரியான முறைகளில் குடிப்பதன் மூலமாக நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.

நீர்…

நீரை குடிப்பதால் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவில் உள்ள அதிக எடை கொண்ட குழந்தைகளிடம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் குளிர்ந்த நீரை குடிக்கக்கூடிய குழந்தைகளில் 25 சதவீதம் வேகமாக கலோரிகள் எரிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீர் குடிப்பது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

உண்மையிலேயே தண்ணீர் அதிகமாக குடிப்பது பசியைப் போக்குவதற்கு உதவுவதுடன், உடலின் அனைத்து உறுப்புகளும் வேகமாக செயல்படுவதற்கும் உதவுகிறது. கடினமாக உடற்பயிற்சி செய்து தான் நம் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டும் என்றில்லை. முறையாக நாம் தண்ணீர் குடிக்கும் போதே நமது உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்க முடியுமாம்.

அனைவருமே ஆசைப்பட்டதை எல்லாம் சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதன் பின் உடல் எடை அதிகரித்து விட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறுகிறார்கள். பின் உடற்பயிற்சி மையங்களுக்கும் மருத்துவமனைகளுக்குமாக அலைகிறார்கள். ஆனால் எவ்வளவு தான் சாப்பிட்டு நமது உடல் எடை அதிகரித்தாலும், கலோரிகளை எரிப்பதற்கு நீர் முறையாக குடித்தாலே போதுமாம். அதாவது உணவுக்கு முன்பாக தண்ணீர் குடிப்பது பசியை குறைக்கும் என கூறப்படுகிறது.

மேலும் 44 சதவீதம் பேர் உணவுக்கு முன் அதிக அளவு தண்ணீர் குடித்து உடல் எடையை குறைத்துள்ளதாகவும் ஒரு ஆய்வில் கூறப்படுகிறது. மேலும் சாப்பிட்டு முடித்த உடனே தண்ணீர் குடிப்பதும் எடை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக உள்ளதாம். அதாவது சாப்பிடுவதற்கு முன் அதிக அளவில் தண்ணீர் குடிப்பது பசியை குறைக்கும், சாப்பிட்ட பின்னர் தண்ணீர் அதிக அளவு குடிக்கும் பொழுது எடை அதிகரிக்க காரணமாகிறது என கூறப்படுகிறது. இருப்பினும் உடனடியாக சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கக்கூடாது என்று நிறுத்தி விட முடியாது.

water1

இருந்தாலும் படிப்படியாக குறைக்க வேண்டும். இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்குமான உடல் பருமன் பிரச்சினைகளை  குறைப்பதற்கான ஒரு நல்ல முறை. மேலும் காலை உணவுக்கு முன் அதிக அளவில் தண்ணீர் குடித்து விட்டு, அதன் பின்பு உணவு உட்கொள்ளும் பொழுது நமது உடலிலுள்ள 13% கலோரிகள் இதனால் குறைக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. தண்ணீரில் எதுவுமே இல்லை என்றாலும் தண்ணீர் அதிகம் குடிப்பது கொழுப்பை வேகமாக குறைப்பதற்கான ஒரு முறையாக உள்ளது. எனவே உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் உணவு அருந்திய பின் நீர் அதிகம் குடிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது.

author avatar
Rebekal