அந்த விஷயத்தில் எனக்கு தோனி தான் ரோல் மாடல்- தினேஷ் கார்த்திக்..!

இந்திய உள்ளூர் விளையாட்டான விஜய் ஹசாரே தொடரில் தற்போது தமிழ்நாடு அணி விளையாடிய வருகிறது. தமிழ்நாடு அணி விளையாடிய 9 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
தமிழ்நாடு தினேஷ் கார்த்திக் விஜய் தொடரில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பெங்கால் அணிக்கு எதிரான போட்டியில் 72 பந்தில் 97 ரன்களும் ,  மத்தியபிரதேச அணிக்கு எதிரான போட்டியில் 28பந்தில் 65 ரன்கள் அடித்து விளாசினார்.
உலக கோப்பை டி20 போட்டி வரவுள்ள நிலையில் இவரின் ஆட்டம் அனைவரையும் ஈர்த்துள்ளது. இதுபற்றி தினேஷ் கார்த்திக் கூறுகையில் கடைசியில் சில ஓவர்கள்  மீதி இருக்கும் போது இப்படி ரன் அடிப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நான் முதல் நான்கு வரிசையில் களமிறங்கி பேட்டிங்  செய்து ரன்கள் அடிப்பது எளிது என்பது எனக்கு தெரியும்.
ஆனால் அணி அழுத்தத்தில் இருக்கும் ரன் அடிக்க வேண்டும் என நினைக்கிறோம். தோனி இந்திய அணிக்காக  பல வருடங்களாக இதை செய்துள்ளார். அவரை நானும் பின்பற்றுகிறேன். தமிழ்நாடு அணியில் ஷாரூக்கான் சிறப்பாக விளையாடுகிறார் என கூறினார்.

author avatar
murugan