கங்குலி உழைப்பால் தான் தோனி கோப்பைகளை வென்றார் - கௌதம் கம்பீர்.!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் கேப்டன்

By bala | Published: Jul 13, 2020 12:22 PM

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் கேப்டன் தோனியை பற்றி கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியது இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் சிறந்த கேப்டன் தோனியின் வெற்றிகளுக்கான பலன் கங்குலிக்கு தான் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார், மேலும் கங்குலியைவிட சிறந்த கேப்டன் தோனி என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனெனில் இந்திய டெஸ்ட் அணி முதன்முறையாக டெஸ்ட் போட்டிகள் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து தோனி கேப்டனாக இருக்கும் பொழுது தான் சாதனை படைத்தது, மேலும் புள்ளி விவரங்களை வைத்துப் பார்த்தால் கங்குலியை விட தோனி தான் சிறந்த கேப்டனாக திகழ்கிறார்.

தோனி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் சிறந்த கேப்டனாக இருப்பதற்கு முக்கிய காரணம் கங்குலியை உருவாக்கிய பந்துவீச்சாளர் ஜாகிர் கான் தான்,தோனி சிறந்த கேப்டனாக இருப்பதற்கு ஜாகிர் கான் கிடைத்தது தோனிக்கு அதிஷ்டம் தான் உலகத்தில் தரமான பந்து வீச்சாளர் ஜாகிர் கான் தான் என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்ததாக பேசிய கௌதம் கம்பீர் கங்குலி இந்திய அணிக்காக மிகவும் கடுமையாக உழைத்துள்ளார், அதனால் தான் தோனி பல கோப்பைகளை வென்றார் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் மேலும் சமீப காலமாக தோனியை பற்றிய கௌதம் கம்பீர் விமர்சித்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc