அழகு, கல்யாணப் பரிசு உட்பட 4 சீரியல்களை நிறுத்த முடிவு.! சோகத்தில் ரசிகர்கள்.!

அழகு, கல்யாணப் பரிசு உட்பட 4 சீரியல்களை நிறுத்த முடிவு.! சோகத்தில் ரசிகர்கள்.!

Default Image

கொரோனா காரணமாக அழகு, கல்யாணப் பரிசு உட்பட 4 சீரியல்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

வீடுகளில் உள்ள இல்லத்தரசிகளுக்கு சீரியல்கள் என்றாலே மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஒன்று. தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் சீரியல்கள் எதுவும் ஓடவில்லை. இதன் காரணமாக தற்போது சில தொடர்களை நிறுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அழகு, கல்யாணப் பரிசு, சாக்லேட் ஆகிய தொடருடன் மேலும் ஒரு சீரியலை நிறுத்த போவதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன.

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாம். அப்படியே ஷூட்டிங்கை தொடர்ந்தாலும் அதே ஆட்களை வைத்து வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாம். எனவே இந்த சீரியல்களை நிறுத்தி விட்டு இதே படக்குழுவினருடன் புது சீரியலை தொடங்க போவதாக கிசுகிசுக்கப்படுகிறது. இது சீரியல்களை பார்க்கும் ரசிகர்கள் பலருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Join our channel google news Youtube