9 வருசமா பாகிஸ்தான் ரசிகருக்கு இலவசமாக டிக்கெட் கொடுத்து வரும் தோனி!

நாளை இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி மான்செஸ்டரில் உள்ள  எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானில் பிறந்த 63 வயதான முகமது பஷிர் இவர் தீவிர கிரிக்கெட் ரசிகர்.தற்போது அமெரிக்காவில் உணவகம் நடத்தி வரும் இவருக்கு 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இருந்து இந்தியா – பாகிஸ்தான் போட்டியை  பார்க்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இலவசமாக  டிக்கெட் கொடுத்து வருகிறார்.
இது குறித்து மான்செஸ்டரில் நேற்று அளித்த பேட்டியில் பேசிய முகமது பஷிர் , நாளை நடைபெற உள்ள  இந்தியா -பாகிஸ்தான் போட்டியை  பார்ப்பதற்காக நேற்று இங்கிலாந்து வந்தேன். இப்போட்டிக்காக  ஒரு டிக்கெட்டின் விலை 80 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

இந்த டிக்கெட்டின் விலை நான் சிகாகோவிற்கு  திரும்பி சென்று வரும் விமான டிக்கெட்டிற்கு சமம்.ஆனால் நான் இந்த போட்டிக்கான டிக்கெட் வாங்க நான் கஷ்டப்படவில்லை  காரணம் டோனி.
டோனி மிகவும் பிஸியாக இருப்பதால் அவரை நான் செல்போனில் மூலமாக தொடர்பு கொள்ளாமல் மெசேஜ்  மூலமாக தொடர்பு கொண்டு தொடர்ந்து அவருடன் பழக்கத்தில் இருந்து வருகிறேன்.
டோனி டிக்கெட் தருவதாக கூறியதால் மட்டுமே முன் கூட்டியே இங்கிலாந்து வந்தேன். மேலும் 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இருந்து எனக்கு டிக்கெட் வாங்கி கொடுத்து வருகிறார்.
மேலும் டோனி அவர்களுக்கு பரிசு ஓன்று  கொடுக்க வந்திருக்கிறேன்.கண்டிப்பாக  அவரை  சந்தித்து பரிசை கொடுத்து விடுவேன் எனக் கூறினார்.

author avatar
murugan