இந்தியாவில் முதன் முறையாக சர்வதேச காற்றாடி திருவிழா! கோலாகல கொண்டாட்டத்திற்கு தயாராகிறது மைசூர்!

இந்தியாவில் தசரா திருவிழா கர்நாடக மாநிலம் அரண்மனை நகரமான மைசூரில் கோலாகலமாக கொண்டாடப்படும். அதற்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலிலும் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். மைசூர் தசரா திருவிழாவை முன்னிட்டு வருடாவருடம் காற்றாடி திருவிழா நடைபெறும். ஆனால் இந்த வருடம் உலகின் பிரதான நாடுகளிலிருந்தும் காற்றாடி விடும் போட்டியாளர்கள் வரவழைத்து சர்வதேச காற்றாடி திருவிழாவாகக் கொண்டாடப்படவுள்ளது.

வருகிற அக்டோபர் மாதம் 12,13 தேதிகளில் மைசூரில் சர்வதேச காற்றாடி திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஆஸ்திரேலியா, சீனா, மலேசியா, தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும் காற்றாடி விடும் போட்டியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும், உள்நாட்டிலிருந்து 8 வெளிமாநில போட்டியாளர்கள் இந்த காற்றாடி திருவிழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.