தற்காப்பு கலை வல்லுனராக அப்பா! திருட்டு பயலாக மகன்! சரவெடியாய் வெளியான தனுஷின் பட்டாஸ் ட்ரெய்லர்!

  • தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் பட்டாஸ். 
  • இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. 

தனுஷ் நடிப்பில் தற்போது ரிலீசிற்கு ரெடியாகியுள்ள திரைப்படம் பட்டாஸ். இந்த படத்தை கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.இரட்டை வேடத்தில் தனுஷ் நடித்துள்ளார்.

ஸ்னேகா, மெஹ்ரின் ப்ரிஸடா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இப்படம் வரும் பொங்கல் தின விடுமுறையை முன்னிட்டு இம்மாதம் 16-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது. தற்காப்புகலை வல்லுனராக அப்பா தனுஷும், திருட்டு பையனாக மகன் தனுஷ் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர். இப்பட ட்ரைலர் ராசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.