ஓடிடியில் ஜகமே தந்திரம் ரிலீஸ் … சோகத்தில் தனுஷ் ரசிகர்கள்..?

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக (Netflix) ஓடிடி இணையத்தளத்தில் வெளியாவது கிட்ட தட்ட உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை y not studios தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் கடந்த ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றது.

அதன் பிறகு படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் மற்றும் வெளியான நிலையில், இந்த திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதி கேட்டு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அதனை தொடர்ந்து இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான 2 வாரங்கள் கழித்து (Netflix) இணையத்தளத்தில் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது இந்த ஜகமே தந்திரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியா (Netflix) ஓடிடி இணையத்தளத்தில் வெளியாவது கிட்ட தட்ட உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.