1000-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு பிரியாணி விருந்தளித்த டிஜிபி…!

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 1000-க்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கு, டிஜிபி சைலேந்திரபாபு பிரியாணி விருந்தளித்துள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி தொடங்கியது, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து 12  நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நிறைவு பெற்றது. இந்த போட்டியில், 1000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், அர்ப்பணிப்போடு செயல்பட்ட 1000-க்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கு, டிஜிபி சைலேந்திரபாபு பிரியாணி விருந்தளித்துள்ளார். அதோடு, அவர்களுக்கு 3 நாட்கள் விடுமுறையும் அளித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment