இன்று வளர்பிறை பௌர்ணமி (18.05.19) முன்னிட்டு கோயிலை நோக்கி மக்கள்  படை எடுக்கின்றனர்.

ஒவ்வொரு பௌர்ணமிக்கும் மக்கள் மலைக்கோவில் மற்றும் தங்கள் அருகில் உள்ள கோவில்களில் கிரிவலம் மேற்கொள்வர்.பௌர்ணமி கிரிவலம் பயன் அளிக்கும் என்ற மூத்தோர் வாக்குப்படி மக்கள்  பௌர்ணமி அன்று கோவிலுக்கு சென்று கிரிவலம் மேற்கொண்டு இறைவனின் அருளை பெறுகின்றனர்.

அதன் படி இன்று திருவண்ணாமலை ,திருப்பரங்குன்றம்,போன்ற மலைக் கோவில்களில் எல்லாம் மிகவும் விஷேசமாக பௌர்ணமி பூஜை ,கிரிவலம் நடைபெறும்.

மேலும் சாப்டுர் வட்டத்திற்கு உட்பட்ட சதுரகிரி  சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தனமகாலிங்கத்தை தரிசிக்க மக்கள் அமாவாசை மற்றும் பௌர்ணமிகளில் தரிசிக்க செல்வது வழக்கம் அதே போல் இன்று பௌர்ணமியை முன்னிட்டு மக்கள் சுவாமி தரிசனம் செய்வர்.மேலும் பௌர்ணமி நாளில் சிவாலாயம் அல்லது சித்தியடைந்த சித்தர்களை தரிசிப்பது மிகுந்த பலனை அளிக்கும்.இவ்வாறு இன்று கோவில்களில் எல்லாம் சிறப்பு பூஜையானது நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று விரதம் இருந்து சந்திர தரிசனம் செய்யுங்கள் மேலும் அன்னதானம் மற்றும் நீராகரத்தை மற்றவருக்கு வழங்குங்கள் மிகுந்த பலனை தரும். நீங்களும் முடிந்தால் இன்று அருகிலுள்ள சிவாலயம் சென்று சிவனை தரிசித்து அருளை பெறுங்கள்.