இந்த அறிகுறிகள் இருந்தாலும், கொரோனா தொற்றுக்கான அறிகுறி தான்….! – WHO

வாய் உலர்தல், வாய்ப்புண், கோவிட் நாக்கு போன்ற பிரச்னைகளும் கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளாக இருக்கலாம்.

உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் குறித்து, நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில், வாய் உலர்தல், வாய்ப்புண், கோவிட் நாக்கு போன்ற பிரச்னைகளும் கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸின் அறிகுறிகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பதாகவும், கொரோனா வைரஸால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 50% பேருக்கு, வாய் சம்பந்தமான பிரச்சனைகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். வாயில் உள்ள உமிழ்நீர்ச்சுரப்பிகள் போதுமான அளவு உமிழ்நீரை உருவாக்காத நிலையே வாய் உலர்தல் ஏற்பாடாகி காரணமாகிறது.

மேலும், கொரோனா வைரஸ் தசை நார்களையும், வாய் பகுதிகளையும் தாக்குவதாலும் வாய் புண்கள் ஏற்படுகிறது. நாக்கு வெண்ணிறமாகவும், திட்டுதிட்டாகவும் தோன்றுவது தான் கோவிட் நாக்கு என கூறப்படுகிறது. தீய பஃடீரியாக்களிடம் இருந்து வாயை பாதுகாக்க, உமிழ்நீரை உற்பத்தி செய்ய முடியாத போது கோவிட் நாக்கு பிரச்சனை ஏற்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.