அதிபர் தேர்தலில் ட்ரம்பிற்கு எதிராக களம் காணும் ஜனநாயக கட்சி வேட்பாளர் அறிவிப்பு.!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க

By manikandan | Published: Jun 06, 2020 11:19 PM

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில், ஆளும் குடியரசு கட்சி சார்பாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிட உள்ளார். இவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பாக யார் நிற்க உள்ளார் என போட்டி நிலவியது. 

அதில், ஜனநாயக கட்சி சார்பாக முன்னாள் துணை அதிபராக இருந்த ஜோ பிடன் மற்றும் பெர்னி சாண்டர்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. பின்னர், பெர்னி சாண்டர்ஸ் போட்டியில் இருந்து விலகிக்கொண்டார். 

ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட மாகாணங்களில் பிரைமரி தேர்தல் நடைபெற்றது. இதில் ஜோ பிடன் வெற்றபெற்றார். இதனால், ஜோ பிடன் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

 2009 முதல் 2017 முதல் துணை அமெரிக்க அதிபராக பதவி வகித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜனநாயக கட்சியின் தலைவராக பொறுப்புவகித்துள்ளார்.  

Step2: Place in ads Display sections

unicc