தபால் துறை மூலம் 100 டன்னுக்கு அதிகமான பொருள் நாடு முழுதும் விநியோகம்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகம் உள்ளதால் இந்தியா முழுவதிலும் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. அதன் பிறகு தளர்த்தப்படும் என்று நினைத்த நிலையில், தற்போது மத்திய அரசால் மே 3ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பல மக்கள் உணவின்றி வேலை வாய்ப்பு இல்லாததால் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது நாடு முழுவதிலும் தபால் துறை மூலமாக மருந்துகள், பரிசோதனை கருவிகள் ஆகியவை மருத்துவமனைக்கும் பயனர்களுக்கும் வாகனங்கள் மற்றும் விமானம் மூலமாக தபால் துறை வினியோகித்து உள்ளது என்று மத்திய உள்துறை இணை செயலாளர் புன்ய சாலியர் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.
நாடு முழுவதிலும் 2 லட்சத்துக்கும் அதிகமான தபால் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் எனவும் கூறியுள்ளார். மேலும் அரசால் வழங்கப்படக் கூடிய ஓய்வூதியம் பயனாளர்களின் வீடுகளுக்கே சென்று கிடைக்குமாறு செய்துள்ளதாகவும், மக்களுக்கு உணவுப் பொருட்கள் உணவு பொட்டலங்களை வழங்குவதையும் தபால் துறை செய்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal