ஹைதராபாத்திற்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி..!

டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை பறிகொடுத்து 159 ரன்கள் எடுத்தனர்.

ஐபிஎல் தொடரின் 20-வது லீக் போட்டியில் டெல்லி -ஹைதராபாத் அணி மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தனர்.  டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக  தவான், பிருத்வி ஷா இருவரும் இறங்கினர்.

ஆட்டம் தொடக்கத்திலேயே சிறப்பான ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்தி வந்தனர். நிதானமாக விளையாடி வந்த தவான் 28 ரன்னில் ரஷீத் கானிடம் போல்ட் ஆனார். இவர்கள் கூட்டணியில் 81 ரன்கள் எடுக்கப்பட்டது. பின்னர் கேப்டன் ரிஷாப் பண்ட் களமிறங்கினார்.

பண்ட் களமிறங்கிய சிறிது நேரத்திலேயே அரைசதம் விளாசிய பிருத்வி ஷா 53 ரன்னில் அவுட் ஆனார். பிருத்வி ஷா 7 பவுண்டரி ,ஒரு சிக்சர் விளாசினார். இதைத் தொடர்ந்து ஸ்மித் களமிறங்க ரிஷாப் பண்ட், ஸ்மித் இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கை உயர்த்தினர்.

அதிரடியாக விளையாடி வந்த ரிஷாப் பண்ட் 37 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து களம் கண்ட ஹெட்மியர் ஒரு ரன்னில் வெளியேற இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை பறிகொடுத்து 159ரன்கள் எடுத்தனர். 160 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்க உள்ளது. ஸ்மித் கடைசிவரை களத்தில் 34* ரன் எடுத்து நின்றார்.

author avatar
murugan