#IPL2020: ராஜஸ்தானை வீழ்த்தி முதலிடத்தை பிடித்த டெல்லி..!

இன்றைய 30-வது போட்டியில் டெல்லி vs ராஜஸ்தான் அணிகள் மோதியது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது.

டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே பிருத்வி ஷா டக் அவுட் ஆனார். இவரைத்தொடர்ந்து, இறங்கிய ரஹானே 2 ரன் எடுத்து வெளியேறினார். பின்னர், களம் கண்ட ஸ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவான் உடன் சேர்ந்து அணியின் எண்ணிக்கையை உயர்ந்தினர்.

சிறப்பாக விளையாடிய  ஸ்ரேயாஸ் ஐயர் 53, ஷிகர் தவான் 57 ரன்னில் விக்கெட்டை இழக்க பிறகு இறங்கிய வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை, இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 161 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் அணி 162 ரன்கள் இலக்குடன் தொடக்க வீரர்களாக பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் இருவரும் இறங்கினர்.

நிதானமாக விளையாடி வந்த பட்லர் 22 ரன்னில் விக்கெட்டை இழக்க இறங்கிய ஸ்டீவன் ஸ்மித் 1 ரன் எடுத்து வெளியேறினார். தொடக்க வீரர் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி அரைசதம் அடிக்காமல் 41 ரன் எடுத்து பெவிலியன் சென்றார்.

பின்னர், மத்தியில் களம் கண்ட சஞ்சு சாம்சன் 25, ராபின் உத்தப்பா 32 ரன் எடுக்க அணியின் எண்ணிக்கை சற்று உயர்ந்தது. இதைத் தொடர்ந்து, இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 148 ரன் எடுத்து 13 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோல்வியை தழுவியது.

இப்போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றதால் புள்ளி பட்டியலில் 12 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

 

author avatar
murugan