தலைநகரின் தலை எழுத்தை தீர்மானிக்க துவங்கியது தேர்தல்… பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு…

70 சட்ட மன்ற உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையில், ஆளும், ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக ஆட்சி செய்து வந்தார். இந்நிலையில்,  இவரது பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. ஆம் ஆத்மி கட்சியின்,  ஆட்சி நிறைவு பெற உள்ள நிலையில் டெல்லிக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ், பஜக, ஆளும் ஆம்ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப்போட்டி நிலவுகிறது.

Image result for delhi assembly

இந்நிலையில் இதற்க்கான பிரச்சாரம் இனிதே நிறைவடைந்த நிலையில் இன்று பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆளும் ஆம் ஆத்மி, பாஜக ,காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகிறது.ஆம் ஆத்மி மொத்தமுள்ள உள்ள 70 தொகுதிகளிலும்  போட்டியிடுகிறது. காங்கிரஸ் 66 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான ராஷ்டீரிய ஜனதா தளம் 4 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

Image result for delhi assembly

பாஜக 67 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றது. டெல்லியில் தேர்தலுக்காக 13,750 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 1,46,92,136 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதனால் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த வாக்குப்பதிவு சரியாக இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

author avatar
Kaliraj