எழுதி- இயக்கி நடிக்கும் தனுஷ்..!ஜோடியாக சைக்கோபட நடிகை..!அதிரடி காண்பிக்கும் தனுஷ்

நடிகர் தனுஷ் நடிக்கும் 43-வது படம் குறித்த தகவல் ஆனது வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்க உள்ளார்.அதில் நடிகர் தனுஷ் மற்றும் முக்கிய நடிகர்கள் நடிப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷின் 44 படம் பற்றி தகவலும் கசிந்துள்ளது.

அதன்படி நடிகர் தனுஷ் நடிக்கும் 44வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் இந்த படத்திற்கு நடிகர் தனுஷே கதை, திரைக்கதை எழுத உள்ளதாகவும் கூறப்படுகிறது.  இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் ஒப்பந்தமாகி உள்ளாதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.நடிகை நித்யாமேனன் கேரக்டர் சைக்கோ படத்தில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha