சென்னையில் குழாய் மூலம் குடிநீர் வழங்க முடிவு

சென்னையில் நாளை முதல் 700 மில்லியன் லிட்டர் குடிநீர் குழாய் மூலம் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தை பொருத்தவரை சென்னையில் தான் அதிகமாக கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது.கோயம்பேடு மார்க்கெட்டை மையமாக கொண்டு தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தான் சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஓன்று வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் போது அதிக மக்கள் கூடுவதை தவிர்த்து சமூக இடைவெளியை கடைபிடிக்க, ஏற்கனவே லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்த ஆயிரம் தெருக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும்.சென்னையில் உள்ள தெருக்களுக்கு நாள்தோறும் 650 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக தற்போது 50 மில்லியன் லிட்டர் விநியோகிக்கப்படும். நாளை முதல் 700 மில்லியன் லிட்டர் குடிநீர் குழாய் மூலம் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.