DCvsRCB: கோலி, லோம்ரோர் அதிரடி..! டெல்லி அணிக்கு வலுவான இலக்கு..!

ஐபிஎல் தொடரின் இன்றைய DC vs RCB போட்டியில், முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 181/4 ரன்கள் குவித்துள்ளது.

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், இரவு 7:30 மணிக்கு நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி, பெங்களூரு அணியில் முதலில் விராட் கோலி மற்றும் டு பிளெசிஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். டு பிளெசிஸ் அதிரடியாக விளையாடி சில பவுண்டரிகள் அடித்தார். இருந்தும், அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

ஆனால், விராட் கோலி நிதானமாக விளையாடி அரைசதம் கடந்தார். பிறகு, முகேஷ் குமார் வீசிய பந்தில் கோலி ஆட்டமிழக்க, மஹிபால் அதிரடியாக விளையாடி பவுண்டரிகள், சிக்ஸர்கள் அடித்து அரைசதம் விளாசினார். இறுதியில், மஹிபால் மற்றும் அனுஜ் ராவத் களத்தில் இருந்தனர்.

முடிவில், பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் அடித்தது.  பெங்களூரு அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 55 ரன்களும், மஹிபால் லோமரோர் 54* ரன்களும், டு பிளெசிஸ் 45 ரன்களும் குவித்துள்ளனர். டெல்லி அணியில் மிட்செல் மார்ஷ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.