#IPL2022: வெற்றிபெறுமா டெல்லி அணி? 190 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. 

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபாப் டு ப்ளஸ்ஸிஸ் – அனுஜ் ராவத் களமிறங்கினார்கள். தொடக்கத்தில் டு ப்ளஸ்ஸிஸ் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிக்காட்ட, மறுமுனையில் இருந்த அனுஜ் ராவத் டக் அவுட் ஆனார். அவரையடுத்து விராட் கோலி களமிறங்க, 8 ரன்கள் அடித்து டு ப்ளஸ்ஸிஸ் தனது விக்கெட்டை இழந்தார்.

பின்னர் மேக்ஸ்வெல் களமிறங்கிங்க, விராட் கோலியுடன் இணைந்து அதிரடியாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 12 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழக்க, சுயாஸ் களமிறங்கி 5 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறினார். அதிரடியாக ஆடிவந்த மேக்ஸ்வெல் 55 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழக்க, ஷாபாஸ் அஹமத் – டின்ஸ்க் கார்த்திக் கூட்டணி போடு அதிரடியாக ஆடி வந்தார்கள். இதில் தினேஷ் கார்த்திக் 66 ரன்கள் அடித்தார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது டெல்லி அணி களமிறங்கி விளையாடி வருகிறது.