#DAHike:நற்செய்தி…இவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களிக்கு மகிழ்ச்சிஅளிக்கும் வகையில் மத்திய அரசு ஓர் முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது.அதன்படி,மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (டிஏ) 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது.மேலும்,ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி நிவாரணமும் (டிஆர்) 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.DA உயர்வு மற்றும் DR உயர்வு மூலம் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.

அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி,நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில்,7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்த ஓய்வூதியதாரர்கள் இதனால் பயனடைவார்கள்?:

  • ரயில்வே குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்.
  • அகில இந்திய சேவை ஓய்வூதியம் பெறுவோர்.
  • மத்திய அரசு உட்பட சிவில் ஓய்வூதியம் பெறுவோர்,குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்.
  • பொதுத்துறை நிறுவனம்,தன்னாட்சி அமைப்புகளில் ஓய்வூதியம் (absorbee pensioners) பெறுபவர்கள்.
  • ஆயுதப்படை ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் சிவில் ஓய்வூதியம் பெறுவோர்.
  • பர்மா சிவிலியன் ஓய்வூதியம் & குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்த அரசு ஓய்வூதியம் பெறுபவர்களின் குடும்பங்களுக்கு இந்த நடைமுறை பொருந்தும் என்று கூறப்படுகிறது.