34.4 C
Chennai
Friday, June 2, 2023

இன்று அமைச்சராக பொறுப்பேற்கிறார் டி.ஆர்.பி.ராஜா..!

இன்று ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பொறுப்பேற்கிறார் டி.ஆர்.பி.ராஜா.

தமிழ்நாடு  அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது அதன்படி பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து சா.மு.நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக மன்னார்குடி சட்டமன்ற தொகுதியை சார்ந்த டி.ஆர்.பி. ராஜாவுக்கு அத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இன்று காலை 10:30 மணியளவில் ஆளுநர் மாளிகையில்  அமைச்சராக பதவியேற்கவுள்ளார்.