சத்தமில்லாமல் அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை!குமுறும் குடும்பங்கள்

மானியம் இல்லாத எரிவாயுசிலிண்டரின் விலை அதிரடியாக 147 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது .

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள், மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றது.கடந்த மாதத்தில்ரூ. 734யாக இருந்த மானியமில்லா சிலிண்டரின் விலை த்ற்போது 881 ரூபாயாக உயர்த்தப்படுவதாக Indane நிறுவனம் அறிவித்து உள்ளது.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய மெட்ரோ நகரங்களில்  உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மானியம் இல்லாத எரிவாயு சிலிண்டர் விலையானது கடந்த 6 மாதங்களில் 290 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ரூ. 154 வரை உயர்த்தப்பட்டு ரூ.1,589க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
kavitha