இன்று மாலை உருவாகிறது ஃபானி புயல் !நாளை தீவிர புயலாக மாறும்- வானிலை ஆய்வு மையம்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால், டெல்டா மாவட்டங்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.ஆனால் அதேபோல்  தற்போது ஃபானி என்ற புயல் உருவாகியுள்ளது.

இந்நிலையில்  இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை ஃபானி புயலாக மாறி, நாளை தீவிர புயலாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக ஏப்ரல்  30 மற்றும் மே 1-ஆம் தேதிகளில் வட தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதேபோல் 1,150 கிமீ தூரத்தில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் தற்போது 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.

author avatar
murugan

Leave a Comment