ஊரடங்கை படிப்படியாக நீக்க வேண்டும் – மருத்துவ நிபுணர் குழு.!

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தை படிப்படியாக நீக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அமலில் உள்ள பொதுமுடக்கத்தை உடனே முழுவதும் நீக்காமல், ஊரடங்கை படிப்படியாக நீக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியிடம் மருத்துவர் நிபுணர் குழு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்து மக்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் கொரோனா பரிசோதனைகள் அதிகரிப்பதால் தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது. பணியிடங்களில் தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என முதல்வருடனான அலோசனைக்கு பின் மருத்துவ நிபுணர் குழு செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்