ஊரடங்கு நீட்டிப்பு: புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சகம்.!

நான்காவது கட்ட ஊரடங்கின் புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டு மக்களிடையே உரையாற்றிய போது பிரதமர் மோடி நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்தார். இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் இதற்கான அறிவிப்பு விரையில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, 3-ம் கட்ட ஊரடங்கு இன்று இரவுடன் முடிவடையும் இருக்கும் நிலையில் மே 31 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்திற்கான விரிவான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

  • விமான போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் சேவைக்கான தடை தொடரும்.
  • பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை திறப்பதற்கான தடை தொடரும்.
  • அத்தியாவசிய தேவை தவிர இரவு 7 மணிக்கு முதல் காலை 7 மணி வரை பொதுமக்கள் வெளியே வரக்கூடாது.
  • திருமணத்தில் 50 நபர்கள் வரை பங்கேற்க தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • இறுதிசடங்கில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.
  • பொதுஇடங்களிலும், பணியிடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம்.
  • மாநிலங்கள் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், இரு மாநிலங்களுக்கு இடையே பேருந்து சேவையை தொடங்கலாம்.
  • கல்வி நிறுவனங்கள், வழிபாடு தளங்களுக்கு தடை நீடிக்கிறது.
  • ஹோட்டல்கள், மதுபான கூடங்கள் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.
  • பார்வையாளர்களின்றி விளையாட்டு அரங்குகளை திறப்பதற்கு அனுமதி.
  • கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்டோர், 10 வயதிற்குட்பட்டோர் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.
  • பச்சை, சிவப்பு, ஆரஞ்சு மண்டலங்களை நிர்ணயம் செய்வதற்கு மாநில அரசுக்கு அனுமதி.
  • உடற்பயிற்சி கூடங்கள் தொடர்ந்து மூடப்பட்டருக்கும்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்