"தமிழகத்தில் முழுமையாக ஊரடங்கை தளர்த்த முடியாது" – மருத்துவ நிபுணர் குழு

தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாக தளர்த்த முடியாது என்றும் படிப்படியாக தான் தளர்த்த முடியும் எனவும் மருத்துவ நிபுணர் குழுவின் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு தினந்தோறும் அதிகரிப்பதால், தற்போது 2 ஆம் கட்ட ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலம் மே 3 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் ஊரடங்கு நீக்கப்படுமா ? என்று அனைவரது மனதிலும் கேள்வி எழுந்துள்ளது. இதனை குறித்து 3 க்கு பிறகு தான் தெரியும் என்று தகவலும் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் சிகிச்சை முறைகளை வகுக்க அமைக்கப்பட்ட 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டம் முடிந்தபின் பேசிய மருத்துவ நிபுணர் குழுவின் பிரதீப் கவுர், தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாக தளர்த்த தற்போது வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று நீண்ட நாட்களாக நம்முடன் இருக்கும் என்றும் சில இடங்களில் மட்டும் படிப்படியாக ஊரடங்கை தளர்த்த முதல்வரிடம் ஆலோசனைகளை வழங்கியுள்ளோம் என்று கூறியுள்ளார். கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு விகிதம் உயர்ந்துள்ளது. இதனால் கொரோனா தொற்றை அதிகளவில் கண்டறிய முடிந்தது என்று தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் மட்டும் கடந்த ஒரு வாரங்களில் கொரோனா பாதிப்பு 2 மடங்காக அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவதை கட்டாயம் மக்கள் பின்பற்ற வேண்டும் என ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் பிரதீப் கவுர் கேட்டுக்கொண்டனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்