CUET UG 2023: மே மாதத்தில் க்யூட் நுழைவுத்தேர்வு – யுஜிசி அறிவிப்பு

மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான க்யூட் தேர்வு தேதியை அறிவித்தது பல்கலைக்கழக மானியக்குழு.

நாடு முழுவதிலும் உள்ள மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கான விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்வதற்கான நுழைவுத் தேர்வாக CUET UG நடத்தப்படுகிறது. அந்தவகையில், இளநிலை க்யூட் (CUET UG 2023) நுழைவுத்தேர்வு அடுத்தாண்டு மே 21 முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என யுஜிசி அறிவித்துள்ளது.

இதுபோன்று முதுநிலை க்யூட் தேர்வு அடுத்த ஆண்டு ஜூன் முதல் அல்லது 2வது வாரத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. க்யூட் நுழைவுத்தேர்வானது தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் நடைபெறும் என யுஜிசி தெரிவித்துள்ளது. மேலும், CUET UG 2023 தேர்வுக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து விண்ணப்பம் செயல்முறை தொடங்கப்படும்.

டிச.21ம் தேதி வெளியிடப்பட்ட யுஜிசி அறிக்கையின்படி, பாடங்களின் எண்ணிக்கையும், வினாத்தாள்களின் வடிவமும் அப்படியே இருக்கும். மேலும், தேர்வு முடிந்து மாணவர் சேர்க்கை செயல்முறை ஜூலை 2023க்குள் முடிவடையும் என்றும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகஸ்ட் 1, 2023க்குள் கல்வி அமர்வுகளைத் தொடங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment