கடலூர் சிப்காட் தீ விபத்து…! பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று நலம் விசாரித்த அமைச்சர் சி.வெ.கணேசன்…!

தீ விபத்து குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய இழப்பீடு பெற்றுத் தரப்படும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார். 

கடலூர் சிப்காட் பகுதியில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை பாய்லர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ள நிலையில், படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெண்கள் உட்பட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவர்களிடம் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த தீ விபத்து குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய இழப்பீடு பெற்றுத் தரப்படும் என்றும், விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.