#CSK vs KKR:பந்து வீச்சில் திணறடித்த சென்னை….172 ரன்கள் எடுத்தால் வெற்றி…!

CSK vs KKR:இன்று அபுதாபி ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 171 ரன்கள் எடுத்துள்ளது.

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே),மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) அணிகளுக்கிடையேயான லீக் போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு,அபுதாபி ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் தொடங்கியது.

இப்போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி,கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் களமிறங்கினர்.

இருவரும் அதிரடியாக ஆடிய நிலையில்,9 ரன்கள் எடுத்து சுப்மான் கில் ரன் அவுட் ஆனார்.அவரைத் தொடர்ந்து,வெங்கடேஷ் ஐயர் 18 ரன்கள் எடுத்து தோனியிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

இதனையடுத்து,ராகுல் திருப்பதி சிறப்பாக விளையாடி 33 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஜடேஜாவின் பந்து வீச்சில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.இது இப்போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச தனிநபர் ரன் ஆகும்.அணியின் கேப்டன் இயோன் 14 பந்துக்கு 8 ரன்கள் மட்டுமே எடுத்து டு ப்ளெசிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அவரைத் தொடர்ந்து,நிதிஷ் ராணா,ஆண்ட்ரே ரசல்,தினேஷ் கார்த்திக் விக்கெட்டை இழக்க இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை மட்டுமே எடுத்தது.இதனால்,172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கவுள்ளது.