திமுக கூட்டணி – மதுரை, திண்டுக்கல்லில் சிபிஎம் போட்டி!

CPM : திமுக கூட்டணியில் சிபிஎம் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.

Read More – 15 தொகுதிகளுக்கான விருப்ப பட்டியல்… பாஜகவிடம் கொடுத்த ஓபிஎஸ்!

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 10, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 , மதிமுகவுக்கு 1, கொமதே கட்சிக்கு 1, இந்திய முஸ்லீம் லீக்கு 1 என மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 19 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

இருப்பினும், ஒரு சில கட்சிகளுக்கு மட்டும் எந்தந்த தொகுதியில் போட்டி என்று அறிவித்த நிலையில், பிரதான கட்சிகளுக்கு எந்தந்த தொகுதிகள் என்று அறிவிக்கப்படவில்லை. இதனால், எந்தந்த தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குவது என திமுக குழு ஆலோசனை நடத்தி வருகிறது.

Read More – மத்திய அரசை எதிர்ப்பதில் தயக்கம் ஏன்? தவெக தலைவர் விஜய் மீது விமர்சனம்.!

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். இதன்பின் சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கே.பாலகிருஷ்ணன், திமுக கூட்டணியில் சிபிஎம் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Read More – 1000 ரூபாய் பிச்சை சர்ச்சையும்… குஷ்பூ கொடுத்த அதிரடி விளக்கமும்…

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை, மதுரை நாடாளுமன்ற தொகுதிகளில் மார்க்சிஸ்ட் போட்டியிட்டு வெற்றி பெற்றது. இந்த முறையில் மக்களவை தேர்தலில் மதுரை, திண்டுக்கலில் சிபிஎம் கட்சி போட்டியிடுகிறது. நாங்கள் போட்டியிட்டு வென்ற கோவையை திமுகவுக்கும், திமுக வென்ற திண்டுக்கல் எங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment