RTPCR பரிசோதனைகளை அதிகரிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு!

சென்னையில் தினசரி கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் உத்தரவு.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், சென்னையில் தினசரி கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார். மருத்துவமனைகளில் சிகிச்சை முடிந்து செல்லும் நோயாளிகளின் விவரங்களை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் கொரோனா பாதித்தவர்களுக்கு முதற்கட்ட உடற்பரிசோதனை செய்ய 11 மையங்கள் இயங்கிவரும் நிலையில், நாளை முதல் 15 மையங்கள் செயல்பட உள்ளன. இதனால், சென்னையில் நாள்தோறும் 22,000 RTPCR பரிசோதனைகளை 25,000 ஆக அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் RTPCR பரிசோதனை செய்து கண்காணிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். சென்னையில் ஒரே நாளில் 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 194 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்