நடுக்கடலில் கொரோனா பரவியதாக கப்பலில் சிறைவைக்கபட்ட 3,711 பேர்…தத்தளித்த 119 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு

ஜப்பான் கப்பலில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  119 இந்தியர்களை வெளியுறவுத்துறை தனிவிமானம் மூலம் மீட்டுள்ளது.

உலகையை தனது வைரஸ் காரணமாக உலுக்கி வரும் கொரோனா பரவியதாக ஜப்பானில் டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலிலேயே 3,711 பேர் தங்க வைக்கப்படிருந்தனர்.அவர்களில் 138 இந்தியர்களும் அடங்குவர்.இங்கு நாங்கள் தவித்து வரும் எங்களை இந்திய அரசு மீட்க வேண்டும் என்று வீடியோ மூலமாக 138 பேரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில் சோதனை செய்ததில் 119 பேருக்கு கொரோனா பரவிய அறிகுறிகள் இல்லாத நிலையில் அவர்களை மீட்க வெளியுறவுத்துறை வேகமெடுத்தது.

இந்நிலையில் கப்பலில் தவித்து வந்தவர்களை தனி விமானம் மூலம் தாய்நாட்டிற்கு அழைத்து வருவதற்காக இந்திய வெளியுறவுத்துறை ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக அந்நாட்டின் இந்திய தூதரகத்திடம் தெரிவித்தது.

Image

இந்நிலையில் கொரோனா அச்சத்தால் ஜப்பான் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியர்களில் 119 பேர் தாயகம் திரும்பி உள்ளதாகவும் அவர்களோடு 5 வெளிநாட்டினரையும் தனி விமானம் மூலம் மீட்டுள்ளதாகவும் தற்போது விமானம் டெல்லி வந்தடைந்ததுள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

author avatar
kavitha