ரஷ்யாவில் 24 மணிநேரத்தில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா… 1,800 பேர் உயிரிழப்பு…

உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது ரஷ்யாவில் தொடர்ந்து 7 நாட்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்ப்ட்டோர்  கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனாவால் பாதித்தவர்களின்  எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது. ரஷ்யாவில் கொரோனா வைரசை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அதிபர் புதின் எடுத்து வருகிறார். இந்நிலையில், தற்போது கொரோனா வரவலை கட்டுப்படுத்த ரஸ்யாவில் ஊரடங்கு ஐந்தாவது வாரத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக எண்ணெய் மதிப்பு சரிந்துள்ள நிலையில் ரஷ்யா கடும் பொருளாதாரா நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளதுதற்போது ஊரடங்கின் ஐந்தாவது வாரத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மதிப்பு சரிந்துள்ள நிலையில் ரஷ்யா கடும் பொருளாதாரா நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,817 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1,98,676 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இதுவரை அங்கு 1,827 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. .

author avatar
Kaliraj