உலகம் முழுவதும் கொரோனா பரவல் 41 இலட்சத்தை தாண்டிது…. 2இலட்சத்தி 80 ஆயிரம் பேர் பலி….

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலகில் புதிதாக கொரோனா எனும் வைரஸ் நோய் சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப் பட்டது. இந்த வைரஸ் தொற்று  தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவி பல உயிர்களை காவு வாங்கி வருகிறது.
இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்தந்த நாட்டு அரசுகளும் தங்கள் குடிமக்களை பாதுகாக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நடைமுறைப்படுத்தி வருகின்றனர். என்றாலும், கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோரின்  எண்ணிக்கை  தற்போது 41 லட்சத்தை தாண்டியுள்ளது. இதில் கொரோனா வைரஸ் பரவி சிகிச்சை பெறுபவர்களில் 47 ஆயிரத்து 685-க்கும் மேற்பட்டோரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாகவும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 14 லட்சத்து 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு பின்  பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எனினும், இந்த கொடிய வைரஸ் தொற்றிற்க்கு 2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
author avatar
Kaliraj