‘இந்த இரண்டு மருந்தை வைத்து கொரோனோவை கட்டுப்படுத்தலாம்”- டிரம்ப்

கொரோனா வைரசை தடுக்க பல நாடுகள் பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதையெடுத்து அமெரிக்கா கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், அஸித்ரோமைசின், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை கொரோனா பாதிப்புக்கு இந்த 2 மருந்துகளையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

சமீபத்தில், அமெரிக்கா கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை பரிசோதிக்கும் பணியை தொடங்கியது. வாஷிங்டனில் உள்ள  சுகாதார ஆராய்ச்சி மையத்தில் ஆரோக்கியமாக உள்ள 45 பேரிடம் இந்த தடுப்பூசி மருந்து சோதனை செய்து வருகிறது. இந்த பரிசோதனை முடிவுகளில் தடுப்பூசி பாதுகாப்பானது என தெரிய வந்த பிறகு நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.