நாகலாந்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா, 660ஆக உயர்ந்த கொரோனா தொற்று எண்ணிக்கை.! 

நாகலாந்தில் புதிதாக மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 660ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர். மேலும், சிலரது உயிரையும் கொரோனா பறித்துள்ளது. சில இடங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தவும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமை, கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களில் 291 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதை அடுத்து, அதில் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மூன்று பேரும் நாகலாந்தின் பெக் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இது குறித்து வியாழக்கிழமையான இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் மாநில சுகாதார துறை அமைச்சரான எஸ். பங்ன்யு ஃபோம் தெரிவித்தார். இதனையடுத்து நாகலாந்தில் தற்போது 660 பேருக்கு  கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு 356 பேர்  சிகிச்சை பெற்று வருவதாகவும், 304பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.