உலக அளவில் கொரோனா பாதிப்பு! நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கடஹி செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிற நிலையில், இதுவரை உலக அளவில் இந்த வைரஸ் பாதிப்பால், 35,399,043 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வைரஸ் பாதிப்பால் 1,041,824 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 26,623,407 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.