கீரிகள் மூலம் பரவும் கொரோனா வைரஸ்! 1 கோடிக்கும் மேற்பட்ட கீரிகளை அழிக்க டென்மார்க் அரசு முடிவு!

கீரிகள் மூலம் கொரோனா பரவுவதால், ஒரு கோடிக்கும் மேற்பட்ட கீரிகளை அழிக்க டென்மார்க் நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை அழிக்க மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், இதுவரை இந்த வைரஸை அழிப்பதற்கான அதிகாரபூர்வமான மருந்துகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், டென்மார்க் நாட்டில் மிங்க் கீரிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டென்மார்க் நாட்டில், பண்ணைகளில் மிங்க் வகை கீரிகள் உணவுக்காக வளர்க்கப்படுகிறது. இந்த கீரிகளின் இறைச்சி, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்த பண்ணையில் வேலை செய்த 214 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், மிங்க் வகை கீரிகள் மூலம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு வைரஸின் வீரியம் மிக அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, டென்மார்க் நாட்டில் பண்ணைகளில் வளர்க்கப்படும் 1 கோடியே 70 லட்சம் மிங்க் கீரிகளை அழிக்க, அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.