கொரோனா வைரஸ் இதய நோயாளிகளை பாதிக்கும்! இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் இதய நோயாளிகளை பாதிக்கும்.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை உலகளவில், 13,691,627 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 586,821 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த கொரோனா வைராஸ் இதயத்தையும் சேதப்படுத்தும் என இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நோயை மருத்துவர்கள் மல்டி சிஸ்டம் நோய் என்றும் குறிப்பிடுகின்றனர்.

இது உடல் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இதயம் உள்பட உடலின் பல உறுப்புகளில் ஆழமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது, இதனால் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும்  அறிவுறுத்தியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.