30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை செய்யும் கருவி – முதல்வர் பழனிசாமி

சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் கொரோனா தடுப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மக்கள் அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கூறினார். 

மேலும் அரசு சார்பில் 18 மற்றும் தனியார் சார்பில் 6 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் 21 ஆய்வகங்கள் அமைக்க அனுமதி கேட்டுள்ளோம் என்று தெரிவித்தார். இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கும் என்று நம்புகிறோம். இதையடுத்து 30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை செய்யும் ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட உள்ளது. இந்த கருவிகள் வரும் 9ம் தேதி வந்த உடனே, கொரோனா அறிகுறி உள்ளதா என விரைந்து பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்