இன்று முதல் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகை ரூ.2,000 மற்றும் மளிகை பொருட்கள் விநியோகம்….!

  • இன்று முதல் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகை ரூ.2,000 மற்றும் மளிகை பொருட்கள் விநியோகம்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வண்ணம் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் கொரோனா நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கான டோக்கன், மாக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று முதல் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகை ரூ.2,000 மற்றும் மளிகை பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. ஒரு நியாயவிலை கடைகளில் 75 முதல் 200 பேருக்கு தினசரி மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் இந்த மாத இறுதிவரை பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.