வைரல் வீடியோ: கொரோனாவால் சிகிச்சை பெற்றவாறு மசோதாவில் கையெழுத்திட்ட ஆளுநர்!

அமெரிக்காவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில், நாள் ஒன்றுக்கு 2 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. அந்தவகையில், அமெரிக்க நாட்டில் இருக்கும் கொலராடோ ஆளுநராக இருப்பவர், ஜாரெட் பொலிஸ். கடந்த சில தினங்களுக்கு முன் இவருக்கும், அவரின் மனைவிக்கும் கொரோனாதொற்று உறுதியானது. இதன்காரணமாக தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு, சிகிச்சை பெற்றுவருகிறார்.

அதிபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் கையெழுத்திட வேண்டிய சில கோப்புகளை அந்நாட்டு அரசு அனுப்பி வைத்தது. அதனை அவர் கையெழுத்திட்டார். அப்பொழுது அவர் கையெழுத்து செய்தபின், கிருமிநாசினி தெளித்துள்ளார். மேலும் அதனை மூடும் போதும் கிருமி நாசினி தெளித்துள்ளார். அந்த விடியோவை அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது அது வைரலாகி வரும் நிலையில், பலரும் விரைவில் குணமடையுமாறும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.